கடைகளை வாடகைக்கு விடுவதற்கான கேள்வி அறிவித்தல்

வவுனியா வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான நெடுங்கேணி பஸ்தரிப்பு நிலைய கடைத்தொகுதி மற்றும் கனகராயன்குளம் கடைத் தொகுதி என்பனவற்றை 10 வருட காலத்திற்கு வாடகைக்கு வழங்குவதற்கான கேள்வி கோரப்பட்டுள்ளது.
எனவே ஆர்வமுள்ளவர்கள் கேள்வி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம். (விண்ணப்ப முடிவு திகதி 09.05.2025) மேலதிக விபரங்களை இணைப்பில் காண்க
Keymoney-Shops-Tender-2025

 

 

சபை நிதி மற்றும் PSDG நிதியீட்டங்கள் ஊடான வேலைத்திட்டங்களுக்கான பெறுகைக்குழு தீர்மானம்

மேற்படி வேலைத்திட்டங்களுக்கான கேள்விப் பத்திரங்கள் கடந்த 08.04.2025 அன்று எமது பெறுகைக்குழுவினால் திறக்கப்பட்டு பின்வருமாறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம் முடிவுகள் பொதுமக்கள் பார்வைக்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. tec

சபை நிதி மற்றும் PSDG நிதியீட்டங்கள் ஊடான வேலைத்திட்டங்களுக்கான கேள்வி கோரல்

மேற்படி வேலைத்திட்டங்களுக்கு தகுதிவாய்ந்த ஒப்பந்ததாரர்களிடமிருந்து கேள்விகள் எதிர்பார்க்கப்படுகின்றன. விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும் இறுதித் திகதி 07.04.2025 பி.ப 3.00 மணி

மேலதிக விபரங்களை பெற இணைப்பினை பார்வையிடவும்.

7-IFB-Vavuniya-North-2

வழங்குனர்களையும் ஒப்பந்தகாரர்களையும் பதிவு செய்தல் – 2025

2025 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு பொருட்கள், சேவைகளை வழங்குவதற்கு பதிவு செய்ய விரும்பும் தரம் வாய்ந்த வழங்குனர்கள்இ உற்பத்தியாளர்கள்இ ஒப்பந்தகாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்ப முடிவு திகதி 05.12.2024. மேலதிக விபரங்களைப் பெற இணைப்பினைப் பார்வையிடவும். விண்ணப்பப்படிவத்தினை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். Supplier-Registration-Application-2025

வவுனியா வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான பொதுச் சந்தைகளை 2025 ஆம் ஆண்டிற்கு குத்தகைக்கு வழங்குவதற்கான மீள் கேள்வி அறிவித்தல் .

வவுனியா வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான பொதுச் சந்தைகளை 2025 ஆம் ஆண்டிற்கு குத்தகைக்கு வழங்குவதற்கான கேள்வி கோரப்பட்டுள்ளது. விண்ணப்ப முடிவு திகதி 25.11.2024. மேலதிக விபரங்களைப் பெற இணைப்பினைப் பார்வையிடவும். Tender-Notice-2025-Retender

வவுனியா வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான மரக்கறி சந்தைகள், மீன் சந்தைகள், இறைச்சிக்கடைகள் என்பவற்றை 2025 ஆம் ஆண்டிற்கு குத்தகைக்கு விடுவதற்கான கேள்வி அறிவித்தல்

வுனியா வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான மரக்கறி சந்தைகள்இ மீன் சந்தைகள்இ இறைச்சிக்கடைகள் என்பவற்றை 2025.01.01 முதல் 2025.12.31 வரை குத்தகைக்கு விடுவதற்கான கேள்வி கோரப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களை அறிய இணைப்பினைப் பார்வையிடவும். Tender-Notice-2025

வவுனியா வடக்கு பிரதேச சபையின் புளியங்குளம் கடைத்தொகுதி மற்றும் குளவிசுட்டான் பாடசாலை வீதி கல்லிட்டுத் தாரிடல் வேலைத்திட்டங்களுக்கான கேள்வி கோரல்

வவுனியா வடக்கு பிரதேச சபையின் புளியங்குளம் கடைத்தொகுதி மற்றும் குளவிசுட்டான் பாடசாலை வீதி கல்லிட்டுத் தாரிடல் வேலைத்திட்டங்களுக்கான கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்காக தகுதிவாய்ந்த ஒப்பந்ததாரர்களிடமிருந்து கேள்விகள் கோரப்படுகின்றன. விண்ணப்ப முடிவு திகதி 27.10.2024. மேலதிக விபரங்களைப் பெற இணைப்பினைப் பார்வையிடவும். 7-IFB-12.10.2024-

வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான கனகராயன்குளம் மற்றும் சந்பத்நுவர மொத்த மரக்கறி கொள்வனவு நிலையங்களை குத்தகைக்கு வழங்குவதற்கான கேள்வி அறிவித்தல்.

வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான கனகராயன்குளம் மற்றும் சந்பத்நுவர மொத்த மரக்கறி கொள்வனவு நிலையங்களை 01/11/2024 தொடக்கம் 31/12/2025 வரையான காலப்பகுதிக்கு வாடகைக்கு வழங்குவதற்காக கேள்விகள் கோரப்படுகின்றன. விண்ணப்ப முடிவு திகதி 2024/10/24 பிற்பகல் 1.30 வரை.
மேலதிக விபரங்களை பெற இணைப்பினை பார்வையிடவும்.Collecting-Center-Tender-Tamil

கேள்வி அறிவித்தல்

கனகராயன்குளம் பொதுச் சந்தைக்கு அருகாமையில் உள்ள வவுனியா வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான கடையினை ஒரே கொடுப்பனவு (கீமணி) அடிப்படையில் வாடகைக்கு வழங்குவதற்கான கேள்வி கோரப்பட்டுள்ளது. கேள்வி விண்ணப்பங்களை ஏற்கும் இறுதி திகதி 06.09.2024 பி.ப 2.00 மணி வரை. மேலதிக விபரங்களை பெற இத்துடன் உள்ள இணைப்பினை வாசிக்கவும். Keymoney Shops Tender 2024

கேள்வி அறிவித்தல்

வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட நெடுங்கேணி குளக்கட்டு வீதி கல்லிட்டுத் தாரிடல் வேலைத்திட்டத்திற்கான கேள்வி கோரப்பட்டுள்ளது. அதற்காக தகுதிவாய்ந்த ஒப்பந்ததாரரிடமிருந்து கேள்வி விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது. கேள்வி விண்ணப்பங்களை பெற விரும்புபவர்கள் 21.08.2024 ஆம் திகதி தொடக்கம் 03.09.2024 ஆம் திகதி வரை அலுவலக நாட்களில் மாலை 3.00 மணி வரை வவுனியா வடக்கு பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும். மேலதிக விபரங்களை பெற இத்துடன் உள்ள இணைப்பினைப் பார்வையிடவும்.Nedunkerny-KullakkaduRoadTender