
கேள்வி அறிவித்தல்

PSDG 2024 இன் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள கீழ்க்குறிப்பிடப்படும் வேலைத்திட்டங்களுக்கான கேள்வி கோரப்பட்டள்ளது. 1. நெடுங்கேணி பலநோக்குக் கூட்டுறவுச் சங்க வீதி கல்லிட்டுத் தாரிடல் 2. வேலடி மற்றும் ஆயிலடி - பெரியமடு வீதி பராமரிப்பு வேலை. இதற்காக தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கேள்விப்பத்திரங்கள் விநியோகிக்கப்படும் இறுதித் திகதி 19.05.2024 பி.ப 3.00 வரை. மேலதிக தகவல்களை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.
வவுனியா வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான மரக்கறி சந்தைகள்இ இறைச்சிக்கடைகள் என்பன 01.05.2024 தொடக்கம் 31.12.2024 வரையான காலப்பகுதிக்கு குத்தகைக்கு விடப்படவுள்ளன. எனவே தகுதிவாய்ந்த கேள்விதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்ப முடிவு திகதி 30.04.2024 பி.ப 12.45 வரை. மேலதிக தகவல்களை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
வவுனியா வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கலைஞர்களையும் கலைப் பாரம்பரியத்தையும் ஊக்குவிக்கும் முகமாக பௌர்ணமி கலைவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப் பௌர்ணமி விழாவில் பங்குபற்ற விரும்பும் கலைஞர்கள் இங்கு தரப்பட்டுள்ள நிகழ்நிலை விண்ணப்ப படிவத்தினை பூர்த்திசெய்து சமர்ப்பிக்கவும்.
வடக்கு மாகாணத்திலுள்ள 34 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் இன்று (01.03.2024) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களினால், கைதடியிலுள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் 10 மணியளவில் இணையதளங்கள் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன. உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளை புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக மக்கள் மயப்படுத்தும் நோக்குடன் புதிய இணையதளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன, உள்ளுராட்சி ஆணையாளர் எஸ். பிரணவநாதன், உதவி ஆணையாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இணையதள வடிவமைப்பில் ஈடுபட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் உத்தியோகஸ்தர்களுக்கு மெச்சுரை சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், கௌரவ ஆளுநர் அவர்களினால் பிரதம விருந்தினருக்கான உரை நிகழ்த்தப்பட்டது.