கேள்வி அறிவித்தல்

வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட நெடுங்கேணி குளக்கட்டு வீதி கல்லிட்டுத் தாரிடல் வேலைத்திட்டத்திற்கான கேள்வி கோரப்பட்டுள்ளது. அதற்காக தகுதிவாய்ந்த ஒப்பந்ததாரரிடமிருந்து கேள்வி விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது. கேள்வி விண்ணப்பங்களை பெற விரும்புபவர்கள் 21.08.2024 ஆம் திகதி தொடக்கம் 03.09.2024 ஆம் திகதி வரை அலுவலக நாட்களில் மாலை 3.00 மணி வரை வவுனியா வடக்கு பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும். மேலதிக விபரங்களை பெற இத்துடன் உள்ள இணைப்பினைப் பார்வையிடவும்.Nedunkerny-KullakkaduRoadTender

இலவச மருத்துவ முகாம்

வவுனியா வடக்கு பிரதேச சபை, அரச சேவை ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்துடன் இணைந்து கடந்த 26.062024 அன்று ஒலுமடு பொதுநோக்கு மண்டபத்தில் இலவச மருத்துவ முகாமினை நடாத்தி இருந்தது. இவ் மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றிருந்தனர்.

முன்பள்ளி கட்டட அடிக்கல் நாட்டு நிகழ்வு

LDSP திட்டத்தின் கீழ் ரூபா 16.83 Mn நிதி ஒதுக்கீட்டில் வவுனியா வடக்கு பிரதேச சபையின் நெடுங்கேணி முன்பள்ளி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 19.06.2024 அன்று நெடுங்கேணியில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் திரு இ.பிரதாபன், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு தெ.ரதீஸ்வரன், சபையின் செயலாளர் திருமதி சோ.மணிவண்ணன், சபையின் உத்தியோகத்தர்கள், திட்டத்தின் சமூக கண்காணிப்பு உறுப்பினர்கள், வர்த்தகர் சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

சனசமூகநிலையங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்

சபையின் ஆளுகைக்குட்பட்ட சனசமூக நிலையங்களுடான கலந்துரையாடலானது 2024.05.14 ஆம் திகதி அன்று சபையின் மாநாட்டு மண்டபத்தில் சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தரகள் சனசமூக நிலையத்தின் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் நடைபெற்றது. இதன்போது சனசமூகநிலையங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சவால்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

PSDG நிதி ஒதுக்கீட்டின் கீழான வேலைத்திட்டங்களுக்கான கேள்வி அறிவித்தல் – 2024

PSDG 2024 இன் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள கீழ்க்குறிப்பிடப்படும் வேலைத்திட்டங்களுக்கான கேள்வி கோரப்பட்டள்ளது. 1. நெடுங்கேணி பலநோக்குக் கூட்டுறவுச் சங்க வீதி கல்லிட்டுத் தாரிடல் 2. வேலடி மற்றும் ஆயிலடி - பெரியமடு வீதி பராமரிப்பு வேலை. இதற்காக தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கேள்விப்பத்திரங்கள் விநியோகிக்கப்படும் இறுதித் திகதி 19.05.2024 பி.ப 3.00 வரை. மேலதிக தகவல்களை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.

 

வவுனியா வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான மரக்கறி சந்தைகள், இறைச்சிக்கடைகள் என்பவற்றை 2024.05.01 முதல் 2024.12.31 வரை குத்தகைக்கு விடுவதற்கான மீள் கேள்வி அறிவித்தல் – 2024

வவுனியா வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான மரக்கறி சந்தைகள்இ இறைச்சிக்கடைகள் என்பன 01.05.2024 தொடக்கம் 31.12.2024 வரையான காலப்பகுதிக்கு குத்தகைக்கு விடப்படவுள்ளன. எனவே தகுதிவாய்ந்த கேள்விதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்ப முடிவு திகதி 30.04.2024 பி.ப 12.45 வரை.  மேலதிக தகவல்களை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்

 

 

முன்பள்ளி கட்டுதல் மற்றும் கலாசார மண்டப புனர்நிர்மாண வேலைகளுக்கான கேள்வி அறிவித்தல்

வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு புதிதாக முன்பள்ளி கட்டுதல் மற்றும் கலாசார மண்டப புனர்நிர்மாண வேலைகளுக்கான கேள்வி கோரப்பட்டுள்ளது. மேற்படி கேள்விப்பத்திரங்களை எதிர்வரும் 25.04.2024 ஆம் திகதி பி.ப 3.00 மணிவரை வவுனியா வடக்கு பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலதிக விபரங்களை பார்வையிட  இங்கே கிளிக் செய்யவும்.

பௌர்ணமி விழா முதலாம் காலாண்டு – 2024

வவுனியா வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கலைஞர்களையும் கலைப் பாரம்பரியத்தையும் ஊக்குவிக்கும் முகமாக பௌர்ணமி கலைவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப் பௌர்ணமி விழாவில் பங்குபற்ற விரும்பும் கலைஞர்கள் இங்கு தரப்பட்டுள்ள நிகழ்நிலை விண்ணப்ப படிவத்தினை பூர்த்திசெய்து சமர்ப்பிக்கவும்.

  •  குழுவாக பங்குபற்றின் ஒருவர் மாத்திரம் இவ் விண்ணப்பத்தினை சமர்ப்பித்தல் போதுமானது.
  • தாங்கள் நிகழ்வுக்கான விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கின்றபோது எந்த சனசமூகநிலையம் ஊடாக நிகழ்விற்கு விண்ணப்பிக்கின்றீர்கள் என்பதனை குறிப்பிடுவது அவசியமாகும். 

 

 

வடமாகாண உள்ளுராட்சிமன்றங்களுக்கான இணையத்தள அங்குரார்ப்பணமும் மெச்சுரை வழங்கல் நிகழ்வும் -01.03.2024

வடக்கு மாகாணத்திலுள்ள 34 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் இன்று (01.03.2024) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களினால், கைதடியிலுள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் 10 மணியளவில் இணையதளங்கள் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன. உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளை புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக மக்கள் மயப்படுத்தும் நோக்குடன் புதிய இணையதளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன, உள்ளுராட்சி ஆணையாளர் எஸ். பிரணவநாதன், உதவி ஆணையாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இணையதள வடிவமைப்பில் ஈடுபட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் உத்தியோகஸ்தர்களுக்கு மெச்சுரை சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், கௌரவ ஆளுநர் அவர்களினால் பிரதம விருந்தினருக்கான உரை நிகழ்த்தப்பட்டது.

கர்ப்பிணிப்பெண்களுக்கான பால்மா வழங்கும் நிகழ்வு

எமது சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சபைக்குட்பட்ட வானது வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரியின் பிரிவின் கீழ் அமைந்துள்ள புளியங்குளம் குடும்ப நல உத்தியோகத்தரின் பிரிவிலுள்ள 19 கர்ப்பிணிப் பெண்களுக்கு 2024.01.24 ஆம் திகதி அன்று சபையின் செயலாளர், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது.