எமது சேவைகள்
கட்டட அனுமதி
எமது சபை எல்லையினுள் கட்டப்படுகின்ற அனைத்து கட்டடங்களும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் பிரிவு 49 இன் பிரகாரம் எமது நிர்வாக எல்லைக்குள் அமைக்கப்படுகின்ற அனைத்து கட்டடங்களும் எமது சபையின் அனுமதி பெறப்பட்டிருத்தல் வேண்டும்.
வியாபார அனுமதி
எமது சபை எல்லையினுள் இயங்குகின்ற அனைத்து வியாபாரங்களும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் பிரிவு 147 மற்றும் சபையின் துணைவிதியின் பிரகாரம் வியாபார அனுமதியினை பெற்றிருத்தல் அவசியமாகும்.
வியாபார வரி
எமது சபை எல்லையினுள் இயங்குகின்ற அனைத்து வியாபாரங்களும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் பிரிவு 149 இன் பிரகாரம் வியாபார வரியினை செலுத்துதல் வேண்டும்.
சுற்றாடல் பாதுகாப்பு உரிமம்
எமது சபை எல்லையினுள் இயங்குகின்ற சுற்றாடலுக்கு தீங்குவிளைவிக்கக்கூடிய அனைத்து வியாபாரங்களும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 1980 இன் 47 இலக்க தேசியசுற்;றுச்சூழல் சட்டத்தின் பிரகாரம் சுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தினை பெற்றிருத்தல் வேண்டும்.
திண்ம கழிவு அகற்றல்
எமது சபை எல்லையினுள் உள்ள இல்லங்கள், வியாபார நிறுவனங்கள், மற்றும் பொது இடங்கள் அனைத்திலும் இருந்து கழிவகற்றல் நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுமக்கள் தமது இடங்களில் இருந்து வெளியேற்றும் கழிவுகளை தரம்பிரித்து பிரதேச சபையின் கழிவகற்றும் சேவையில் ஒப்படைத்து ஒத்துளைப்பு வழங்கவும்
திரவ கழிவு அகற்றல்
திரவ கழிவகற்றல் சேவை தேவைப்படுவோர் எமது சபையுடன் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்வதன் மூலமாக திரவகழிவகற்றல் சேவையினை பெற்றுக்கொள்ளமுடியும்.
நீர்விநியோகம்
குடிநீர் தேவைப்படுவோர் எமது சபையுடன் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்வதன் மூலமாக குடிநீரினை பெற்றுக்கொள்ளமுடியும்.
வாகனங்களை வாடகைக்கு விடல்
எமது சபையிடமிருந்து உழவு இயந்திரம் மற்றும் கனரக வாகனங்களான Backhoe Loader, Roller, Motor Grader போன்றவற்றை முன்பதிவு செய்வதன் மூலம் வாடகைக்கு பெற்றுக்கொள்ள முடியும்.
ஆயுர்வேத வைத்திய சேவை
எமது சபையின் கனகராயன்குளம் மற்றும் நெடுங்கேணியில் அமைந்துள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளில் இருந்து கிளமை நாட்களில் 8.30 தொடக்கம் 4.00 மணிவரையிலும் சனிக்கிளமையில் 8.30 தொடக்கம் 12.30 வரையிலும் பொதுமக்கள் ஆயுர்வேத வைத்திய சேவையினை பெற்றுக்கொள்ள முடியும்.