தகவலறியும் உரிமை தொடர்பான விபரணம்
தகவலறியும் உரிமை என்றால் பகிரங்க அதிகாரசபைகளிடம் தமக்கு வேண்டிய தகவல்களை அறிந்துகொள்ள பொதுமக்களுக்குள்ள உரிமை தகவல் அறியும் உரிமை ஆகும். இது இலங்கையின் அரசியல் யாப்பின் 19ஆவது சீர்திருத்தத்தில் தகவலறியும் உரிமை (பிரிவு-14 அ) உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் அதன்படி 2016ஆம் ஆண்டு 12ஆம் இலக்க தகவலறியும் உரிமை சட்டம் உருவாக்கப்பட்டது.
‘தகவல் உத்தியோகத்தர்’
பொதுமக்கள் பகிரங்க அதிகாரசபையில் தமது முதல் தகவல் கோரிக்கையை முன்வைக்க வேண்டிய அலுவலகர் தகவல் உத்தியோகத்தர் ஆவார். அவர் உங்களது தகவல் கோரிக்கையினை கருத்தில் கொண்டு தகவலை வழங்கும் பொறுப்பினை கொண்டுள்ளார்.
இவர் தகவலறியும் உரிமை சட்டத்தின் பிரகாரம் தகவல் கோரிக்கையை முன்வைப்பவருக்கு தம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் தகவல் உத்தியோகத்தர் வழங்க வேண்டும். இதனுள் தகவல் கோரிக்கை கிடைக்கப்பெற்றமைக்கான ஏற்பு ஒப்ப ஆவணம்இ குறித்த கோரிக்கைக்கு உரிய நேரத்தில் பதிலளித்தல்இ கோரிக்கைக்கு பதிலளிக்க கால அவகாசம் தேவைப்படுமாயின் அதனை கோரிக்கையாளருக்கு அறிவித்தல் வழங்கல்இ தகவல் கோரிக்கை வாய் மொழி மூலம் விடுக்கப்படுமாயின் அதனை எழுத்து மூலம் மேற்கொள்ளல்இ தகவல் கோரிக்கைகள் தொடர்பிலான பதிவுகளை பராமரித்தல் மற்றும் தகவல் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க அதிகாரசபையின் ஏனைய உறுப்பினர்களின் உதவியை நாடல் ஆகியன உள்ளடங்குகின்றன.
‘குறித்தளிக்கப்பட்ட அதிகாரி’
தகவல் கோரிக்கை தொடர்பில் பகிரங்க அதிகாரசபையில் மேன்முறையீடுகளை ஏற்றுக்கொள்ளும் அதிகாரி குறித்தளிக்கப்பட்ட அதிகாரி ஆவார். தகவல் உத்தியோகத்தரிடமிருந்து கிடைக்கும் பதில் திருப்தி அளிக்காவிட்டாலோ அல்லது பதில் கிடைக்காவிட்டாலோ குறித்தளிக்கப்பட்ட அதிகாரியிடம் மேன்முறையீட்டை மேற்கொள்ளலாம். இவர் மேன்முறையீட்டாளரின் முறையீடு குறிப்பிட்ட கால எல்லைக்குள் இருக்குமாயின் அதனை ஏற்றுக்கொள்வார்.
‘பகிரங்க அதிகாரசபைகள்’
பகிரங்க அதிகாரசபைகள் என்றால் அரசியலமைப்பினால் அல்லது அரசியலமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட அமைப்புக்கள், கூட்டுத்தாபனங்கள் போன்ற அரசாங்கம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் ஆகியவற்றால் கட்டுப்படுத்தக்கூடிய நிறுவனங்கள் மற்றும் நீதியை நிலைநாட்ட உருவாக்கப்பட்ட நீதிமன்றங்கள் மற்றும் இணக்க சபைகள்.
மேலும் ஒப்பந்தங்கள், அனுமதிபத்திரங்கள் அல்லது பங்குடமை ஊடாக அரச நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அனுமதி பத்திரங்களுடன் அல்லது சட்டத்தினூடாக உருவாக்கப்பட்டு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவன நிதியீட்டத்தில் இயங்கும் பொதுமக்களுக்கு பணியாற்றும் நிறுவனங்கள்.
தகவலறியும் உரிமை கோரிக்கையை விடுத்தல்
தகவலறியும் கோரிக்கையை விடுப்பவர் இலங்கை குடிமகனாக இருத்தல் வேண்டும். குடிமகன் என்பதற்குள் கூட்டிணைக்கப்பட்டு அல்லது கூட்டிணைக்கப்படாத அமைப்புக்கள் உள்ளடங்குவதுடன் அவற்றில் நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்கள் குடிமக்களாக இருக்க வேண்டும்.
பொதுமக்கள் தாம் அறிய விரும்பும் தகவலை தகவலறியும் உரிமை விண்ணப்ப படிவம் (RTI 1) மூலமாக விண்ணப்பிக்க முடியும். ஆயினும் இவ்விண்ணப்ப படிவத்தை பயன்படுத்த வேண்டுமென்பது கட்டாயமில்லை. தகவல் கோரிக்கைக்கான காரணங்களை உள்ளடக்கிய எழுத்துமூலமான கோரிக்கையை சமர்ப்பித்தால் போதுமானது.
தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் விலக்களிப்பு பெறக்கூடிய தகவல்
சட்டத்தின் பிரிவு 5 இல் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் மட்டுமே கோரிக்கை விடுக்க முடியாது
பொதுமக்கள் நலன் சாராத தனிப்பட்ட தகவல்களை கொண்ட விடயங்கள்இ தேசிய பாதுகாப்பு மற்றும் நாடுகளுடனான தேசிய தொடர்புகள்இ நாட்டின் பொருளாதாரம் சார்ந்த விடயங்கள்இ வர்த்தக தொடர்புகள் சார்ந்த இரகசிய விடயங்கள்இ தனிப்பட்ட மருத்துவ தரவுகள்இ தேசிய பாதுகாப்பு மற்றும் குற்றவியல் சார்ந்த வழக்குகளை பாதிக்க கூடிய தகவல்கள்இ நீதிமன்றங்களை அவமதிக்க கூடிய மற்றும் அவற்றின் சுயாதீன தன்மையை பாதிக்க கூடிய தகவல்கள்இ பாராளுமன்ற மற்றும் மாகாண சபைகளின் சிறப்புரிமைகளை பாதிக்க கூடிய தகவல்கள்இ பரீட்சைகளின் ஒழுங்கமைப்பை பாதிக்க கூடிய தகவல்கள்இ தேர்தல்கள் தொடர்பான இரகசிய தகவல்கள் மற்றும் அவை சார்ந்த தீர்மானங்கள் எடுக்கப்படாத அமைச்சரவை பத்திரங்கள் போன்ற தகவல்கள் தொடர்பில் கோரிக்கை விடுக்க முடியாது.
மேன்முறையீட்டு நடைமுறை
• தகவல் உத்தியோகத்தரால் வழங்கப்படும் பதில் தொடர்பில் கோரிக்கையாளர் திருப்தியடையாவிட்டால் அப்பதில் கிடைத்த நாளில் இருந்து 14 நாட்களுக்குள் குறித்தளிக்கப்பட்ட அதிகாரியிடம் மேன்முறையீட்டை மேற்கொள்ளலாம்.
• குறித்தளிக்கப்பட்ட அதிகாரியில் பதிலில் திருப்தியடையாவிட்டாலோ அல்லது அவர் பதிலளிக்க தவறும் பட்சத்திலோ தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் இரு மாத காலப்பகுதிக்குள் மேன்முறையீட்டை மேற்கொள்ளலாம்.
• குறித்தளிக்கப்பட்ட அதிகாரியின் தீர்மானம் தொடர்பில் திருப்தியடையாத போது அல்லது குறித்தளிக்கப்பட்ட அதிகாரியிடமிருந்து பதில் கிடைக்கப்பெறாத போது தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் மேன்முறையீட்டை மேற்கொள்ளலாம்.
மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்வதற்காக தகவலறியும் உரிமைச் சட்டத்தினை வாசிக்க இங்கே அழுத்தவும்