இலங்கை பொதுநிதிக் கணக்குகள் நிறுவனத்தினால் வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையே 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த வருடாந்த அறிக்கைகள் மற்றும் கணக்கறிக்கைகளை தெரிவுசெய்கின்ற போட்டியில் பிரதேச சபைகள் பிரிவின் கீழ் வடக்கு மாகாணத்தில் உள்ள 29 பிரதேச சபைகளுள் வவுனியா வடக்கு பிரதேச சபையானது தங்கப்பதக்கத்தினை பெற்றுள்ளது. அதற்கான வெற்றிக்கேடயம் மற்றும் சான்றிதழ் என்பன அனுராதபுர நகரில் உள்ள வடமத்திய மாகாணசபை கேட்போர்கூடத்தில் 22.09.2023 அன்று வழங்கிவைக்கப்பட்டிருந்தது.