2024 ஆம் ஆண்டிற்கான பொதுமக்கள் பங்களிப்புடனான பாதீடு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கடந்த 15.08.2023 ஆம் திகதி புளியங்குளம் வடக்கு புளியங்குளம் தெற்கு ஆகிய கிராம மக்களின் பங்களிப்புடன் நடைபெற்றது. அதன்போது சபையின் செயலாளர் திருமதி சோதிநாயகி மணிவண்ணன், சபை உத்தியோகத்தர்கள், புளியங்குளம் வாழ் பொதுமக்கள் ஆகியோரது சமூகத்துடன் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் பொதுமக்கள் தமது பகுதியில் முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் தமது கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.