எமது சபை பற்றி
எமது சபை 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டதின் கீழ் உருவாக்கப்பட்டு 126 கிராமங்களை உள்ளடக்கிய 14 வட்டாரங்களைக்கொண்ட 858.07 சதுர கிலோமீட்டர் பரப்பளவினை ஆளுகை செய்கிறது.
இது வடமாகாணத்தின் வவுனியா மாவட்டத்தின் வடக்கே பனைநின்றானையும், கிழக்கே சம்பத்நுவரவினையும் தெற்கே வெடிவைத்த கல்லினையும் மேற்கே இராமநூர் புளியங்குளத்தினையும் எல்லைகளாக கொண்டுள்ளது. எமது சபை எல்லையினுள் 25 கிராமசேவகர் பிரிவுகளில் 8607 குடும்பங்களை சேரந்த 25401 பேர் வாழ்கின்றார்கள்.
பொதுமக்களுக்கான சேவைகளாக பொதுநிர்வாகம், சுகாதாரம், பொளதீகத்திட்டமிடல், நீர்வழங்கல், பிறபயன்பாட்டுச் சேவை மற்றும் நலன்புரிச்சேவை ஆகிய சேவைகளை வழங்கி வருகின்றது.
எமது சபையினது சராசரி சொந்த வருமானமாக 3,000,000.00 ரூபா தொகை மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் கிடைக்கின்ற நன்கொடைகளைக் கொண்டு உள்;ராட்சித் தத்ததுவத்தினது நோக்கங்களை அடைய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம்.
எதிர்காலத்தில் எமது சபையானது புதிய வருமான மார்க்கங்களை கண்டறிந்து வருமானத்தினை அதிகரிப்பதன் மூலம் உச்சபட்ச அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் பொதுமக்களுக்கான திருப்திகர சேவைகளினை வழங்கவும் எதிர்பார்க்கின்றோம்.